இரு தொடரிலும் தோனி ஒரங்கட்டப்பட்டார் : ரோகித் சர்மா நீக்கம் : பும்ரா, தவான் இணைப்பு

149
MS Dhoni

இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அணியுடன் டி-20 கிரிக்கெட் தொடரிலும் ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் விளையாட உள்ளது.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் டி-20மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை சற்று முன்னர் அறிவித்துள்ளது.

டி-20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா நீக்கப்பட்டார். மேலும், இரு தொடரிலும் பும்ரா, தவான் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி அணியில் இடம்பெறாதது புரியாத புதிராகவே உள்ளது.

 

டி-20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பெயர்கள் வருமாறு :

விராட் கோலி, தவான், ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஷிவம் டுபே, ஜடேஜா, குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், தாகூர் மற்றும் பும்ரா ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பெயர்கள் வருமாறு :

விராட் கோலி, தவான், ரோஹித் சர்மா, ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, ஷமி, தாகூர், பும்ரா, சாஹல் மற்றும் சயினி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.