விருதுகளை அள்ளிக் குவித்த த்ரிஷா : உற்சாகத்தில் ரசிகர்கள்

20 views
விருதுகளை அள்ளிக் குவித்த த்ரிஷா

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா.

இவர், முதலில் 1999இல் சிம்ரனுக்கு தோழியாக ஜோடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின், சூர்யாவுடன் இணைந்து மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் நடிகையாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
அன்று முதல் இன்றுவரை தமிழில் முன்னணி நடிகையாகவே திகழ்கிறார்.

அதனைத் தொடர்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய் என்று தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கலக்கி வருகிறார்.

சென்ற வருடம், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வெளியான ’96’ திரைப்படம் இவருக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
அப்படத்தின் மூலம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றார் த்ரிஷா.
அப்படத்திற்காக த்ரிஷா, மொத்தம் 11 விருதுகளை வாங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, தெலுங்கு சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான ஹெ ஜூட் என்ற திரைப்படத்திற்காக 3 விருதுகளை வாங்கியுள்ளார்.

மொத்தம் 14 விருதுகளுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் த்ரிஷா தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.