ஆதார் இணைக்கத் தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கக்கூடும்

17
pan പാൻകാർഡ് ഉള്ളവർ തീർച്ചയായും ഇത് അറിയുക

புதுடெல்லி:

மார்ச் 31ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கத் தவறினால், செயல்படாத நிரந்தர கணக்கு எண்ணைப் பயன்படுத்துவதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கக்கூடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதை செய்யத் தவறினால் முதல் கட்டமாக பான் எண் செயலற்றதாக மாற்றப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே சமயம், யாராவது செயலிழப்பு செய்யப்பட்ட பான் அட்டையைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு சட்டப்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வங்கி பரிவர்த்தனை, சொத்து விற்பனை, பங்குசந்தை முதலீடு, மியூச்சுவல் பண்ட்கள் போன்றவற்றில் செயலற்ற பான் எண்ணை பயன்படுத்துவது குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செயலற்ற பான் எண்ணை வைத்திருப்பதும், பான் எண் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான் என கூறியுள்ள வருமானவரித்துறை, ஆதாருடன் இணைத்த பிறகு பான் எண்ணுக்கு உயிர் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் அப்டேட்

ஒருவேளை நீங்கள் பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைக்கவில்லை என்றால், அவைகளை இணைப்பதற்கு இரண்டு அருமையான வழிகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, அதார்-பான் இணைப்பை வருமான வரித்துறையின் Income Tax e-filing வலைத்தளம் மூலம் இணைக்கலாம். இரண்டாவதாக 567678 (அ) 56161 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம். ஏற்கனவே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வரை கால நிர்ணயம் விதிக்கப்பட்டு பிறகு தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு தற்போது மார்ச் 31ம் தேதியே கடைசி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

How to link PAN with Aadhaar:

  •  Visit the Income Tax Department e-filing portal – incometaxindiaefiling.gov.in
  •  Go to ‘Link Aadhaar’ option on the left side of the homepage
  •  Enter your PAN, Aadhaar numbers and your name as per AADHAAR
  •  Mark ‘I have the only year of birth in Aadhar card,’ if you have only the birth year on the Aadhaar
  •  Mark ‘I agree to validate my Aadhar details with UIDAI,’ if you agree to do so
  •  Enter the captcha code on your screen
  •  Click on ‘Link Aadhaar’ option to request linking of PAN and Aadhaar