கொரோனா பீதி: அதிரடியாக தளபதி விஜய் வீட்டிற்கு விசிட் அடித்து அதிர வைத்த சுகாதாரதுறை அதிகாரிகள்!

140

கொரோனா வைரஸில் இருந்து எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது என்பது பற்றிய விழிப்புணர்வு ஒரு பக்கம் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், இந்த வைரஸ் இந்தியாவின் உள்ளே அதிகம் பரவாமல் தடுக்கும் முயற்சிகளையும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களுடைய வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. மேலும், அவ்வாறு வெளிநாடு மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமை படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகர் Vijayயின் பெயரும், சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்கள் பட்டியலில் இருந்ததை அடுத்து, நீலாங்கரையில் உள்ள தளபதியின் வீட்டிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள், அதிரடியாக விசிட் அடித்துள்ளனர்.

MORE CINEMA NEWS CLICK HERE 

பின்னர் கடந்த 6 மாதமாக Vijay உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த யாரும் வெளிநாடு செல்லவில்லை என தெரியவந்தபின், நோட்டீஸ் எதையும் ஒட்டாமல்… வீட்டில் கிருமி நாசினியை மட்டும் தெளித்து விட்டு அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் சிறு சலசலப்பை எற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.