உலகிலேயே பெரிய திரையில் ரிலீசாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்ற பிகில்!

230

விஜய், விவேக் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது. கிட்டத்தட்ட 4000 க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

ஆந்திரப்பிரதேச மாநிலம் சூலூர்பேட்டையில் வி எபிக் என்ற திரையரங்கும் க்யூப் சினிமா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 அடி அகலத்திற்கு பரந்து விரிந்து காணப்படுவதுதான் இந்த வி எபிக் திரையரங்கின் சிறப்பம்சம். மொத்தம் 3 திரைகளை கொண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்ட இந்த திரையரங்கில் இதுவரை எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அகண்ட திரை கொண்ட இந்த திரையரங்கில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை விஜய்யின் பிகில் படம் படைத்துள்ளது.