உலக கோப்பையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் பவுலிங் சூறையாடிய இந்திய அணி

185

இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் இன்று மதியம் 3 மணிக்கு மான்செஸ்டரில் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மாவும் கேஎல் ராகுலும் நல்ல துவக்கத்தை தந்தனர்.

இந்திய அணியின் துவக்க வீரரான கே எல் ராகுல் 78 பந்தில் 57 ரன்கள் குவித்த நிலையில் ரியாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்து கோஹ்லி ரோகித் சர்மாவுடன் கைகொடுக்க இந்திய அணியின் ரன்கள் வேகமாக உயர்ந்தன.

ரோகித் சர்மா 113 பந்தில் 140 ரன்களை குவித்தார் இதில் 13 போர்களும் 3 சிக்சர்களும் அடங்கும். அடுத்து ஆடிய இந்திய அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற கோஹ்லி மட்டும் 77 ரன்களை கடந்தார் .

அதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் மட்டுமே எடுத்தது.