சர்ச்சையை கிளப்பிய இறுதிச்சுற்று நடிகை : அமலாபால் பாணியில் ஐந்து நபர்களை திருமணம் செய்து கொள்வேன்

155

திருமணம் செய்தால் குறைந்தபட்சம் ஐந்து நபர்களை ஆவது திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ரித்திகா சிங்.

மும்பையைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரரான ரித்திகா சிங் தமிழில் குத்துச்சண்டை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

குத்துச் சண்டை வீரராகவே நடித்ததால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
முதல் படத்திலேயே பாராட்டுக்களைப் பெற்ற ரித்திகா தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

பின் விஜய் சேதுபதி உடன் இணைந்து ஆண்டவன் கட்டளை மற்றும் லாரன்சுடன் இணைந்து சிவலிங்கா படத்திலும் நடித்தார்.
தற்போது அருண் விஜய் ஜோடியாக பாக்சர் படத்திலும் நடிக்க உள்ளார்.

சமூக ஊடகங்களில் நாட்டம் கொண்ட ரித்திகா இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துரையாடும் போது ரசிகர்களுடன் சர்ச்சையை கிளப்பினார்.

கலந்துரையாடலின் போது ரசிகர் ஒருவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்ட கேள்விக்கு ரித்திகா தான் திருமணம் செய்தால் ஐந்து பேரை திருமணம் செய்வேன் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார்.மற்றும் தனக்கு காதலில் நாட்டம் இல்லை எனவும் தற்போது படங்களில் கவனம் செலுத்த போவதாகவும் தெரிவித்தார்.

பின் தனக்கு மது பழக்கம் இல்லை எனவும் பல பார்ட்டிகளுக்குச் சென்று குத்தாட்டம் போடுவது பிடிக்கும் என்றும் கூறினார்.

தன் திருமணத்தைப் பற்றி ரித்திகா கூறிய செய்தி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.இதைக் கேட்ட பலர் ரித்திகாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைப்போல அமலாபால் தன் ஆடை பட வெளியீட்டின் போது தனக்கு நிறைய கணவர்கள் வேண்டும் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியது நினைவுக்கு வருகிறது.