சிறுநீரை அடக்குவதால் உடலில் ஏற்படும் விளைவுகள என்னென்ன தெரியுமா..?

139

ஒரு சிலர் சிறுநீர் வந்ததாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள்.சிறுநீரை உள்ளேயே அடக்கி வைக்கும் போது நம் இரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகமாகும். இன்னும் ஒரு சிலர் எவ்வளவுதான் அவசரமாக இருந்தாலும் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள்.

நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதினால் ஒருவித அசெளகரியத்தை நம்மால் உணரமுடியும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலி உண்டாகும்.

சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும்.

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து விடுகிறது, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இப்பழக்கமானது நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

சிறுநீர்ப்பை நீண்ட நேரம் நிறைந்திருந்தால், அது சிறுநீரகத்தை பாதிக்கும், சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துவிடும்.

எப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்று தோன்றுகிறதோ, அப்போது உடனே சிறுநீர் கழிக்க வேண்டும். மேலும் வெளியிடங்கலில் சிறுநீர் கழிக்க தயங்குபவராக இருப்பின், வெளியே இருக்கும்போது த்ண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

சிறுநீரை அடக்குவதால் தோலில் கொப்பளம் போன்றவை உண்டாகி அதன் மூலம் கழிவுகள் வெளியேறத் துவங்கும். அதில் முக்கியமானது கரப்பான் என சொல்லப்படும் எக்சிமா. இது காலில் கொப்பளத்தை ஏற்படுத்தி, அரிப்பை ஏற்படுத்தும். அதை சொறியும்போது அதில் இருந்து நீர் கசியும். அந்த நீர் பட்ட இடத்தில் மீண்டும் கொப்பளம் வரும். முந்தைய கொப்பளம் வந்த இடம் கருப்பாக மாறிவிடும்.

ஆகவே சிறுநீர் மற்றும் மலத்தை அடக்காமல் இருப்பது மிகவும் அவசியம் அதுவே நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும்.