Home News தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !!! மாணவர்கள் பாதி மகிழ்ச்சி , மிதி...
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க மாணவர்களிடையே போராட்டம் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்!!!!
அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
கிறிஸ்துமஸ், உள்ளாட்சி தேர்தல், புத்தாண்டையொட்டி ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை முடிவடைந்து ஜனவரி 2ம் தேதி பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் துவங்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.