முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் அம்மணி.
விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். அதே தொலைக்காட்சியில் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகள், பேட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை டிடி தொகுத்து வழங்கி பாராட்டையும் புகழையும் பெற்று வருகிறார். பேசத் தயங்கும் பிரபலங்கள், எப்போதுமே லைம் லைட்டில் இருக்கும் செலிபிரட்டிகளிடம் சாமானியன் கேட்க விரும்பும் கேள்விகள் என மக்களின் பல்ஸ் பிடித்து இன்டர்வியூ செய்வதில் டிடி சகஜால கில்லாடி.
இதற்கிடையில் கடந்த 2014-ஆம் அண்டு ஜூன் 29-ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இதனையடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டனர். இந்நிலையில் முதன் முறையாக தனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை குறித்து கூறிய அவர், நம் வாழ்வில் திருமண பந்தம் முறியலாம், நம்முடன் வேறெந்த உறவும் எதிர்பார்க்காத நேரத்தில் தள்ளிப்போகலாம். அந்த நேரத்திலும் மனதை தளரவிடாமல் அவற்றை எல்லாம் மறந்து விட்டு, வழக்கம்போல நாம் காலையில் எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டு வேலைக்கு கிளைம்பினால், உங்கள் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது. உங்களுக்கான வெற்றி உங்களுக்குள்ள இருக்கு உங்களை தானே தேடி வரும் எனக்கூறி மனம் உருக பேசினார்.